பிரதான செய்திகள்

உகண்டாவுக்கு உதயங்க வருவாரா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் உதயங்க வீரதுங்கவை சந்தித்தமை பாரிய குற்றமாகும். இது தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும். அத்துடன் உகண்டாவுக்கும் உதயங்க வருவாரா என்பதையும் தேடிப்பார்க்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் முன்னாள் உக்ரேன் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சந்தித்தமை பாரிய குற்றமாகும். உதயங்க வீரதுங்க அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் நபர். இதுதொடர்பில் அரசாங்கம் ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அத்துடன் உதயங்கவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அப்படியென்றால் அவர் எவ்வாறு தாய்லாந்துக்கு வந்தார்? தற்போது மஹிந்த ராஜபக்ஷ் உகண்டாவுக்கு சென்றுள்ளார். அங்கும் அவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது  எனவே இதுதொடர்பில் புலனாய்வு பிரிவினர் தேடிப்பார்க்க வேண்டும்.

Related posts

அமைச்சர் ஹக்கீம் அறிந்து பேசுகிறாரா? அல்லது அறியாமல் பேசுகிறாரா?

wpengine

முஸ்லிம் ஆசிரியைகள் ஆடைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் நடவடிக்கை

wpengine

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்

wpengine