ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்க மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றும் இன்றும் இந்த அறிக்கை குறித்து பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் 7ம் திகதியும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 8 மற்றும் 9ம் திகதிகளில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5 தொடக்கம் 9ம் திகதி வரை பாராளுமன்றம் கூடும் எனவும் 5ம் திகதி முழு நாளும் கேள்விக்கான பதில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் 50 கேள்விகள் கேட்க வாய்ப்பு வழங்கப்படும் என சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன அறிவித்தார்.