உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும், இஸ்ரேல் எச்சரிக்கை..!

ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார், ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலிற்காக பெரும் விலையை செலுத்தும் நிலையை அவர் உருவாக்குகின்றார் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கமேனி தொடர்ந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான்பற்றி எரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி
ஈரானின் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேலின் ஒரு பகுதி

ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளதுடன் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஏர்டொகனை கொலை செய்ய திட்டம்! இராணுவத்திற்கு ஆயுள் தண்டனை

wpengine

பணக்கார பெயரை இழந்த முகேஷ் அம்பானி! மீண்டும் வேறு ஒருவர்

wpengine

Turkish Parliament Punch-Up (Video)

wpengine