பிரதான செய்திகள்

இ.போ.ச மன்னார் சாலை முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்! சரீரப் பிணையில் விடுதலை

(பிராந்திய செய்தியாளர்) 

டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடமாக தங்கள் தொழிலகத்தை வைத்திருந்தமைக்காக இலங்கை போக்குவரத்து; சபை மன்னார் சாலை முகாமையாளருக்கு எதிராக  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பகுதியில் டெங்கு நுளம்பு அபாயம் தோன்றியிருப்பதைத் தொடர்ந்து மன்னார் சுகாதார பகுதியினர் முக்கிய இடங்களில் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய மன்னார் சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் மன்னார் நகர வடக்கு சுகாதார பரிசோதகருடன் பொது சௌக்கிய சுகாதார பரிசோதகர்கள் மன்னார் எழுத்தூரில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து மன்னார் சாலையை பரிசோதித்தவேளையில் அங்கு டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் சூழ்நிலை இருப்பதைக் கண்டுபிடித்து சாலை முகாமையாளருக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வியாழக்கிழமை (09.02.2017) நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
.
இவருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகளாக மன்னார் நகர வடக்கு பொது சௌக்கிய சுகாதார பரிசோதகர் இ.மி.அன்பழகன் மன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தெரிவிக்கையில் மன்னார் இ.போ.ச.சாலை வளாகத்தில் திறந்த நீர் தொட்டியில் நீர் தேங்கி இருந்ததுடன் அதற்குள் நுளம்பு குடம்பிகள் இருக்க்கக் காணப்பட்டன, கிணறும் பாவனையற்ற முறையில் காணப்பட்டதுடன் அங்கும் இவ்வாறான நிலை காணப்பட்டது. நுளம்பு பெருகும் இடமாக டையர்கள், பேனிகள் போன்ற பாத்திரங்கள் காணப்பட்டன, அவ் வளாகம் முழுதும் பொலித்தீன் கழிவுப் பொருட்கள் தென்பட்டன, மலசலக்கூடம் பின்பக்கத்தில் குப்பைகள் காணப்பட்டன
.
இது விடயமாக இரண்டு முறை இவர்களுக்கு அறிவித்தல் வழங்கியதில் மூன்று குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றபோதும் ஏனைய இரண்டு குறைபாடுகள் தொடர்ந்து நிவர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

எதிரிக்கு சார்பாக சிரேஷ;ட சட்டத்தரனிகள் எம்.எம்.சபூர்தீன், எஸ்.செபநேசன் லோகு, எம்.ஏ.எம்.முபாரக் ஆகியோர் ஆஐராகி வாதாடியதைத் தொடர்ந்து சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் இனம் காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் அவற்றை சுகாதார பரிசோதகரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மன்றில் அறிக்கையிடும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இஸ்லாமிய சொற்பொழிவு

wpengine

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை

wpengine

மாகாண சபைகளின் தேவைகளை உணரத் தவறிய சக்திகள்..!

wpengine