செய்திகள்பிரதான செய்திகள்

இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை .!

இ-பாஸ்போர்ட் அல்லது மின்னணு பாஸ்போர்ட் வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

அதன்படி, இ-பாஸ்போர்ட் வழங்கும் பணியை சுமார் 8 மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, ​​வெளிநாட்டு பாஸ்போர்ட் வழங்குவது வழக்கமான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம்

wpengine

எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் காலை இழந்த சாரதி . !

Maash

இடைக்கால நிதி 96மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

wpengine