கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அதிசொகுசு லெம்போகினி கார், நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு லெம்போகினி கார்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் அதிகம் சர்ச்சையில் ராஜபக்ச குடும்பத்தினர் சிக்கியிருந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புதிய லெம்போகினி காருடன் ராஜபக்ஷர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பு துறைமுகத்திற்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள லெம்போகினி காரின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த நவீன வாகனத்தில் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
குறித்த லெம்போகினி மோட்டார் வாகனத்தை மோட்டார் வாகன நிறுவன உரிமையாளரான ஜிஹான் ஹமீட் என்பவரின் மனைவியின் பெயரில் கொண்டு வரப்பட்டது. இவர் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவராகும். அத்துடன் நாமலின் நெருக்கமான நண்பியும் ராஜபக்சர்களின் மனதை வென்ற ஒருவருமாகும்.
இலங்கைக்கு வாகனங்கள் கொண்டுவரும் பிரதான தரப்பு நிறுவன உரிமையாளரான அவரின் மனைவி, தீர்வை வரி தொடர்பில் ஏற்பட்ட சிக்கலின் போது, அந்த வாகனத்தில் உண்மையான உரிமையாளர் அரசியல் முக்கியஸ்தரின் மகன் ஒருவர் என குறிப்பிட்டார்.
5000 CC திறன் கொண்ட எஞ்சின்கள் இந்த வாகனத்திற்கு பொருத்தப்பட்டுள்ள நிலையில் மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் பயணிக்கும் என கூறப்படுகின்றது.
என்ஜினின் திறனுக்கு அமைய வாகனத்திற்கு 580 இலட்சம் ரூபா வரி செலுத்த வேண்டும் எனவும் இந்த வாகனத்தின் சந்தைப் பெறுமதி 1190 இலட்சம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியல்வாதியின் மகனால் கொண்டு வரப்பட்டதென கூறி அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனின் பெயரில் மாற்றிவிடுவதற்கான முயற்சிகளை மஹிந்த தரப்பு ஊடகங்கள் மேற்கொண்டன.
எனினும் ஜிஹான் மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் காணப்பட்ட நெருக்கமான தொடர்பினால் உண்மையாக தகவல்கள் வெளிவருவதற்கு ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய இந்த வாகனமும் நாமல் ராஜபக்சவின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே காணப்படுவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.