அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இஸ்லாமிய புதுவருட வாழ்த்தினை தெரிவித்த ரிசாட் எம்.பி.

“முஸ்லிம்களின் முன்மாதிரிகளுக்கு முஹர்ரம் வழித்தடமாய் விளங்கட்டும்” – இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் எம்.பி தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறுவதற்கு, பிறந்துள்ள முஹர்ரம் வழி திறக்குமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“இஸ்லாமிய உறவுகள் சகலருக்கும் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். பிறந்துள்ள இஸ்லாமிய புதுவருடத்திலிருந்து ஈமானைப் பலப்படுத்தும் நல்லமல்களுடன் நெருக்கமாகுவோம். சில்லறைச் சமாச்சாரங்களுக்காக உடைந்துபோன நமது உறவுகளை புதுப்பிக்க இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும்.

நாடு உட்பட சர்வதேசத்தின் நாலாபுறங்களிலிருந்தும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை தோற்கடிக்க ஈமானிய உள்ளங்கள் ஒன்றுபடட்டும்.

ஏகாதிபத்தியம் எம்மை அடக்கியாள முடியாது. ஈமானின் பலத்துக்கு முன்னால், எந்த சக்தியாலும் வெற்றி பெறவும் இயலாது. இறைவனின் நம்பிக்கையில், இறைதூதரின் முன்மாதிரியில் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம். ஈருலகிலும் இந்த வெற்றிகளையடைய இதுவே வழியாகும்.

இஸ்லாமிய உறவுகளின் ஹலாலான தேவைகள் அனைத்தையும் “அல்லாஹ்” அருள்பாலிக்கட்டும்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘பேஸ்புக்’ தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு

wpengine

உலக சாதனைக்காக நடனமாடும் இளைஞன்

wpengine

நட்டஈடு, உரம் வழங்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் இராஜனமா- ரொஷான் ரணசிங்க

wpengine