பிரதான செய்திகள்

இஸ்லாமிய பி.பி.சி. செய்தியாளர் நீக்கம்! காரணம் என்ன

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளராக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் அஸாம் அமீனை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.


அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு சில தினங்களின் முன்னர்

வெளியாகியிருந்தது.

இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு வெளியாகி உள்ளமையால் பி.பி.சி. அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன,
இதே வேளை பி.பி.சி.யின் முன்னாள் ஊடகவியலாளர் அஸாம் அமீனை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கவில்லை எனவும் தான் சுயமாக இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்.

ரஞ்சன் ராமநாயக்கவுடனான, அஸாம் அமீனின் கலந்துரையாடல் அடங்கிய குரல் பதிவு கடந்த 19ஆம் திகதி சிங்களே அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிபிசி செய்தி சேவையில் இருந்து விலகுவதாக எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை அஸாம் அமீன் முன்வைத்துள்ளார்.

குரல் பதிவு வெளியான சம்பவம் தொடர்பில் கருத்தில் கொண்ட பிபிசி நிறுவனம் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னார், மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு 300வீடுகள்

wpengine

எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது,, மல்வானையில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

wpengine

மன்னார் டிப்போக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மாவட்டச் செயலாளர் !

Editor