உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் ,உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று இரவு கொழும்பு ஷங்கிரி லா விடுதியில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு வருகைத்தந்திருந்த தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவைத் தொடர்ந்து பேணுவதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தொற்று நிலைமை சவால்களை வெற்றி கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் இன,மத வேறுபாடின்றி தலைமன்னாரில் காணி பத்திரம்

wpengine

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இயங்கவில்லை

wpengine

அணு ஆயுத ஒப்பந்தம்! 60நாற்களில் ஈரானுக்கு பொருளாதார தடை

wpengine