பிரதான செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடக முகவர் நிறுவனமான ரொய்ட்டர்ஸிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதன் மூலமாக நாட்டில் மீண்டும் புலனாய்வுப் பிரிவை கட்டியெழுப்பி, இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் கோத்தபாயவின் அறிவிப்பு வெளிவந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இக் குண்டுத் தாக்குதல்களை ராஜபக்ச தரப்பினர் தங்களுக்கு சாதகமாக்கி தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கு முயற்சிப்பார்கள் என்றும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

Maash

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தீர்மானம் ஒத்திவைப்பு

wpengine

இராணுவ சோதனைச்சாவடிகள் வட மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்கள்

wpengine