பிரதான செய்திகள்

இஸ்லாமிய தீவிரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொண்டு வரும் முயற்சியில் றிசாட பதியுதீன் பொதுபல சேனா குற்றசாட்டு

(எச்.எம். நியாஸ்)  

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலிருந்தே அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இபோதும் அந்த முயற்சியையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் என்று பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர்  நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுக் காலை (25/03/2016) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்  தெரிவித்த தேரர் மேலும் கூரியதாவது,

“துருக்கி நாட்டின் உதவியுடன் சுமார் 3000 மதரஸாக்களுக்கு நிதியுதவி பெற்றுக்கொடுத்து, அங்கே இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளை அமைச்சர் வளர்க்கப்பாடுபடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இவ்வாறான கருத்துக்கள் மூலம் சிங்கள மக்கள் மத்தியிலே, அமைச்சர் றிசாத் மீதான குரோதக் கருத்துக்களை உருவாக்க முயற்சிக்கின்றார். வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிசாத் மீது பல்வேறு மோசமான குற்றச்சாட்டுக்களை ஞானசார தேரர் பரப்பினார். அதன் பின்னர் அமைச்சரின் கைத்தொழில்,வர்த்தக அமைச்சுக்குள் அவரும், அவரது சகாக்களும் அதிரடியாக உள்ளே நுழைந்து, அட்டகாசங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஜாதிக பல சேனாவின் தேரர் ஒருவரை ஏசியும், பேசியும் அவரை பல்வேறு வழிகளில் சீரழித்தனர். இப்பொது இந்தக் கதையை பரப்புகிறார்.

ஞானசார தேரர் அமைச்சர் மீது இல்லாத, பொல்லாத கதைகளைப் பரப்பி, சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சரைப் பற்றிய தவறான எண்ணங்களை உருவாக்க முயற்சிக்கின்றார்.

 

Related posts

வவுனியா பேருந்து நிலையத்தின் அவல நிலை ;அரசியல்வாதிகள் எங்கே?

wpengine

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine

அரசாங்கம் வழமை போன்று முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்ட ஆரம்பித்துள்ளது

wpengine