பிரதான செய்திகள்

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

முஸ்லிம்கள் மீதான இனவாத பாரபட்சத்தை கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்காத கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் முறை தவறி தகனம் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றமை குறித்து இலங்கையனாக வேதனை அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இனவாத பாரபட்சத்தை கண்டிப்பதாகவும் இந்த நடத்தையை எதிர்த்து நிற்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீண்டும் குரங்காட்டம் ஆடத்தொடங்கியுள்ளான் மின்னல் ரங்கா.

wpengine

பூநகரி பிரதேசத்தில் சட்டவீரோத மரம் கடத்தல்! வனவள அதிகாரி தாக்குதல்

wpengine

தொலைபேசியால் உயிரை இழந்த 25வயது இளைஞன்

wpengine