பிரதான செய்திகள்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கூட்டம்.

(அனா)

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு – 2016ஐ ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம் இலக்கியவாதிகளுடனான இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று மாலை வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கவிஞர் ஏ.எம்.ஏ.றஹ்மான் (வாழைச்சேனை) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னா ஷரீப்தீன், செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன், ஆய்வகத்தின் அங்கத்தவர்ளும் கலந்து கொண்டனர்.unnamed (3)

இதன் போது நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக கல்குடாத் தொகுதி முஸ்லீம் இலக்கியவாதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மாநாடு தொடர்பாக பிரதேச ரீதியாக ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்போரும் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் பேராளர்களும் உரிய திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இம் முறை இளம் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன் கடந்த முறை இடம்பெற்ற மாநாட்டில் கொளரவிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை கௌரவம் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டள்ளதுடன் புதியவர்களே கௌரவிக்கப்படவுள்ளதாகவும் ஆய்வகத்தின் தலைவர் வேண்டிக் கொண்டார்.unnamed (2)unnamed (1)

Related posts

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine

வட மாகாண 3 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

wpengine

இரவு நேரத்தில் ஒன்றுகூடிய ராஜபஷ்ச குடும்பம்! பல பிரச்சினை பற்றி மந்திர ஆலோசனை

wpengine