உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டிய ஜோர்டான் எழுத்தாளர் சுட்டுக்கொலை

ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர் நஹீத் ஹட்டார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்தாந்தத்தை பின்பற்றிவரும் பிரபல எழுத்தாளராக ஜோர்டான் மக்களிடையே பிரபலமானவர்.

சொர்க்கலோகத்தில் தாடிவைத்த ஒருவர் பெண்களுடன், புகைபிடித்தபடி கட்டிலில் படுத்துகொண்டு மதுவும், முந்திரிபருப்பும் கொண்டுவரும்படி கடவுளுக்கு கட்டளையிடுவதுபோல் கருத்துப்படத்துடன் (கார்ட்டூன்) வெளியான ஒரு கட்டுரையை இவர் சமீபத்தில் எழுதி இருந்தார்.

இந்த கட்டுரை தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஜோர்டான் நாட்டு முஸ்லிம்கள் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த மாதம்  நஹீத் ஹட்டாரை கைதுசெய்த போலீசார், பிறமதத்தவரின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைநகர் அம்மானில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் ஆஜராவதற்காக  நஹீத் ஹட்டா இன்று கோர்ட்டுக்கு வந்தார். அப்போது கோர்ட் வாசலில் இருந்தவர்களில் ஒரு மர்மநபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். மூன்று குண்டுகள் உடலை துளைக்க ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை கொன்றதாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பால்மாவின் விலை குறைவடையும் சாத்தியம்!

Editor

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash

இப்ராஹிம் மீது முஸ்லிம் காங்கிரஸ் தவம் விமர்சனம்! பொலிஸ் முறைப்பாடு

wpengine