பிரதான செய்திகள்

இஸ்லாமியர்களுக்கும் மதரசா பாடசாலை உள்ளது.அதனை தடைசெய்ய முடியாது

இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாதுதெனத்  தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். மரிக்கார், முதலில் மதரசாவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது தொடர்பில், சரத் வீரசேகர தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்ட மரிக்கார் எம்.பி,  மதரசாவைத் தடைசெய்ய வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் கடுமையான விசனத்தை தெரிவித்தார். 

பௌத்த மாணவர்களுக்கு தஹாம் பாடசாலை போன்றே இஸ்லாமியர்களுக்கும் மதரசா பாடசாலை உள்ளது. எனவே அதனை தடைசெய்ய முடியாது எனத் தெரிவித்த அவர், தடை செய்வதாயின் சிலரின் தனிப்பட்ட தேவைக்காக மதரசாவில் கற்பிப்பதற்காக, வெளிநாடுகளில் வருவோரைத் தடை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். .

மதரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து சமயக் கல்வி என்ற சட்டத்தை ஏற்படுத்தி, அதற்கான, ஒழுங்குபடுத்தலை முன்னெடுக்க வேண்டும். அதனைவிடுத்து, தடைசெய்ய முடியாத விடயங்களைப் பலவந்தமாகத் தடைசெய்வதாக கூறுவதானது வெறுப்புப் பேச்சின் உச்சமாகவே கருதப்படும் என்றார்

Related posts

முரட்டுத்தனமாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – வீடியோ இணைப்பு

wpengine

புலிகளின் பிரிவினைவாத கொள்கை இன்னும் இருக்கின்றது! 20வது திருத்தம் மீள்பரீசிலனை வேண்டும்

wpengine

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் அமைச்சர் றிஷாட்

wpengine