Breaking
Sun. Nov 24th, 2024

பிக்குகள் பற்றி ரஞ்சன் ராமநாயக்க மோசமாக பேசியதற்கு உடனடியாக அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி எம்.பியான ரதன தேரர் முஸ்லிம்கள் பற்றி மிக மோசமாக பேசிய போது அதற்கெதிராக அவருக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன் என கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.


முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

ரஞ்சன் ராமநாயக்கவும், ரதன தேரரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

தேரர் கூட்டுக் கட்சியாக இருந்த போதும் அவர் மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. மாறாக நல்லாட்சியை கொண்டு வர பாடுபட்டவர் என்பதற்காக ஐ.தே.கவால் நியமிக்கப்பட்டவர்.

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதியான ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பௌத்த மத குருமார் பற்றி பேசியதை பௌத்த சமயத்தை அவமதித்ததாக கருதி உடனடியாக இதற்கான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ரணில் விக்ரமசிங்க.

ஆனால் ரதன தேரர் அண்மைக்காலமாக இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், ரணிலின் அமைச்சரவை அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீன் பற்றியும் பொய்யாகவும், அசிங்கமாகவும் பேசுவதன் மூலம் அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதித்து வருவது பிரதமருக்கு தெரியாதா?
ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்டு தேரருக்கு ஒரு கடிதமாவது எழுதாமல் விட்டது ஏன்? பௌத்த மதத்தை கேவலப்படுத்துவது மட்டுமே கேவலம், இஸ்லாத்தை கேவலப்படுத்தினால் அது நல்ல செயல் என பிரதமர் நினைக்கிறாரா?
இத்தனைக்கும் முஸ்லிம்களில் 99 வீதமானோர் ஐ.தே.கவுக்கு வாக்களித்ததன் காரணமாகவே ரணில் இன்று பிரதமராக உள்ளார்.

இந்த நன்றி கூட இல்லாதவராக அவர் இருப்பது கவலையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *