உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேல் இரானுவத்தின் தாக்குதல்! பலஸ்தீனத்தில் 7பேர் மரணம்

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் சுரங்கப்பாதையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். 

இஸ்ரேல் நாட்டுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், காசா பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையை அழிப்பதற்காக இஸ்ரேல் ராணுவத்தினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் சுமார் ஒன்பது பேர் காயம்டைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சுரங்கப்பாதை இஸ்ரேல் எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் மத்திய காசா பகுதியை சேர்ந்த ஒரு முக்கிய ஹமாஸ் அமைப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பலஸ்தீனில் அமைதியை சீர்க்குலைப்பதற்காக இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பொது மக்கள் இந்த தாக்குதலில் மரணமடைந்தனர்.

அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடப்ட இரண்டு ஹமாஸ் வீரர்கள் வீரமரணமடைந்தனர் எனவும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை பலஸ்தீனர்களுக்கு பெற்றுத்தந்து, இஸ்ரேல், மேற்குக்கரை, காசா பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசியக் கட்சிக்குள் எவ்வித உள்ளக முரண்பாடுகளும் இல்லை.

wpengine

அபாயகரமான சமிக்கை எம்முன் கண்சிமிட்டி நிற்கிறது முன்னாள் அமைச்சர் அஸ்வர்

wpengine

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி வெளியீடு அடுத்தவாரம்!

Editor