உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் நாட்டின் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர்.

 

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இப் போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்த போதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசி போரட்டக்காரர்களை தடுக்க தாக்குதல் நடத்தினர்.

இத் தாக்குதலில் பாலஸ்தினத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கிளிநொச்சி சமுர்த்தி நியமனம் கவனம் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

உப்பு நிறுவனத்திற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கிய கோட்டாபய

wpengine

ஜப்பான் அரசாங்கம் மற்றும் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

Maash