செய்திகள்பிரதான செய்திகள்

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமதி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இன்று நாடு திரும்பியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் விசேட முனையத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், திருமதி உலக அழகி போட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் சந்திமல் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேநானாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தென் ஆபிரிக்கா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

Editor

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தி; தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி!

Editor

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

Maash