அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இழப்பீடுகள் அலுவலக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்…

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடம் மற்றும் ஏற்படவுள்ள வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகைமையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் www.parliament.lk என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனும் இணைப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு 2025 ஜுலை 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்படவேண்டும்.

விண்ணப்பங்களை, அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே; எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அல்லது constitutionalcouncil@parliament.lk இற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

இணைப்பு: https://www.parliament.lk/en/secretariat/advertise

Related posts

முத்தரிப்புத்துறை கடற்படை சிப்பாய் தாக்குதல்! விசாரணை ஜனவரி 19ஆம் திகதி

wpengine

சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது

wpengine

இலங்கையில் இறக்குமதி தடைகள் தளர்வு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Editor