பிரதான செய்திகள்

இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் -காத்தான்குடியில் முன்னெடுப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹகீமின் விழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் மேற்படி வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் ஆரம்ப வைபவம் 01-08-2016 இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி காரியாலத்தில் (டாக்டர் அப்துர் றஹ்மான் தோட்டத்தில்) இடம்பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்திற்கான முதலாவது பலன்தரக்கூடிய  மரத்தை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் கையூம் (ஷர்கி) ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவரும்,கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சர் றஊப் ஹகீமின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் ஆகியோர் நட்டி வைத்தனர்.7cc90e97-df72-4af5-83b6-209ef75827f6

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி ,பாலமுனை,காங்கேயனோடை ,பூநொச்சிமுனை ,ஒல்லிக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழுவின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அணியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.4b81283a-dbd0-424c-9423-4015d5723628
குறித்த வேலைத் திட்டம் பலன்தரக்கூடிய மர வகைகளை இளைஞர் காங்கிரஸ் அணியினரைக் கொண்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள வீடுகளில் நட்டு பராமரிப்பதற்கான ஏற்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளதோடு இம் முயற்சியினுடாக இளைஞர்களுக்கும் இப் பிரதேச மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதுடன் மேலும் பயனுடைய இலக்;குகளை அடைவதற்கு இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.048563df-07a8-433a-a394-92e7041e6fea

Related posts

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் மதுபோதை

wpengine

சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம் றிஷாட்

wpengine

சிங்கள மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

wpengine