பிரதான செய்திகள்

இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் பிரவேசிக்க இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரல்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை போன்ற மாவட்டங்களிலுள்ள இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்ற விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர், யுவதிகளிடம் இருந்து கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் பேரவை விண்ணப்பம் கோரியுள்ளது.

நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகமாக இன்றைய இளைஞர்,யுவதிகளின் மனப்பாங்குகளில் ஏற்படும் மாற்றங்களில் உள்ளது.

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். விஷேடமாக இது இளம் ஊடகவியலாளர்களின் பொறுப்பு வாய்ந்த பணியாகவும் கருதப்படுகின்றது.

மக்கள் ஊடகவியலாளர்களை அவர்களிடம் உள்ள தொடர்பினை உணர்வுபூர்வமாக பார்க்கின்றனர்.

ஆயினும், சமூக மட்டத்தில் பிரபல்யம் மிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களை தமது கீழ் மட்டத்தில் வைத்துக் கொண்டு அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கின்ற தன்மை மற்றும் அவர்களை பின்நோக்கி தள்ளப்படும் நிலமையினை வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர்கள் பல தடவை கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் பேரவைக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய இப் பேரவை மாகாணத்தில் உள்ள 35 வயதுக்கு உட்பட்ட அனைத்துஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையில் எதிர்காலத்தில் பணியாற்ற விரும்பும் பாடசாலை மற்றும் பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடரும் மாணவர்கள்,இளம் தயாரிப்பாளர்கள்,செய்தித்தளங்களை  இயக்குபவர்கள்,ஊடகத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் கழகம் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இவ் அமைப்பு எதிர்காலத்தில் தொடர்ந்தும் செயற்பட முன்வந்துள்ளது.

முற்றிலும் இளம் ஊடகவியலாளர்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்படும் இப் பேரவையில் நீங்களும் இணைந்;து செயற்பட விரும்பினால் உங்களுடைய பெயர் விபரங்களை journalist4d@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது 0778327822,0772829126 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி பதிவு செய்யுமாறு கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

Related posts

மஹிந்தவையும் ,மைத்திரியையும் மீண்டும் இணைக்க முயற்சி

wpengine

80 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை! காலம் கடந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

Maash

அரச கட்டிடங்கள், மதஸ்தலங்களில் சோலர் நிறுவுவது குறித்து வெளியான தகவல்!

Editor