பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இல்மனைட் விற்பனையில் மோசடி; விசாரணை நடத்த கோப் குழு பணிப்பு!

2020 ஒக்டோபர் மாதம் இல்மனைட் விற்பனையின் போது, விலை மனு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு 

வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்டவிற்கு கோப் குழு தலைவர் சரித ஹேரத் பணித்துள்ளார். 

165 அமெரிக்க டொலர் மற்றும் 147 அமெரிக்க டொலர் என விலை மனு கேட்கப்பட்டிருந்த நிலையில் குறைந்த விலைமனு கோரியவரை நிராகரித்து 165 டொலருக்கு விலை மனு கோரியவருக்கு இன்மனைட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த விலை மனு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென லங்கா மினரல் சேன்டிஸ் லிமிடட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவில் தெரிவித்துள்ளனர். 

உலக சந்தையில் இல்மனைட் ஒரு மெட்ரிக் டொன் 240 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

wpengine

றிஷாட் மீது போலிகளை பேசும் ஹக்கீம்,சிங்கள இனவாதம்

wpengine

வவுனியா மாவட்ட நோயாளிகள் அவதி!

wpengine