புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் ஹிரா பௌண்டே~ன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இலவச உம்ரா திட்டத்தின் இரண்டாவது குழு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி மக்கா நகர் நோக்கி பயணிக்கவுள்ளது.
உம்ரா அல்லது ஹஜ் கடமையை இதுவரைக் காலமும் நிறைவேற்றாத 55 மேற்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்களை இலவசமாக உம்ராவுக்கு அனுப்பும் இத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் அடங்கிய முதல் குழு கடந்த மார்ச் 28 ஆம் திகதி மக்கா நகருக்கு சென்று தமது கடமைகளை நிறைவேற்றிய பின் நாடு திரும்பியிருந்து.
இந்நிலையில், நேர்முக பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது குழு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி உம்ரா கடமைக்காக மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளனர்.
அதேவேளை, 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இத்திட்டத்தில் மிகுதியானவர்கள் எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,
‘ஹிரா பௌண்டே~ன் முன்னெடுக்கும் நற்பணிகளில் இதுவும் ஒன்று. இத்திட்டத்தினை நோன்பு மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.’ என்றார்.