பிரதான செய்திகள்

இலஞ்சம் வாங்க மறுத்த யாழ் சாவகச்சேரி பொலிஸ் அதிகாரிக்கு சன்மானம்!

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குற்றச்செயலுடன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

கோட்டாவிடம் இன்று விசாரணை

wpengine

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

wpengine