பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

25,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பேருவலை பிரதேசசபை பகுதியைச் சேர்ந்த தொழிநுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, பயாகல பிரதேசசபையின் உப அலுவலகத்தில் வைத்து சந்தேகநபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயாகல பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் மற்றும் நீச்சல் தடாகத்திற்குத் தேவையான சான்றிதல் போன்றவற்றுக்குத் தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்கவே சந்தேகநபர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இதன்படி குறித்த பணத்தை பெற்றுக் கொண்ட வேளை அந்த தொழிநுட்ப அதிகாரியை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

மேலும் இவரை களுத்துரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகைதர வேண்டாம்.

wpengine

QR முறையில் வாகனங்களுக்கு எரிபொருள் அதிகரிப்பு

wpengine

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine