பிரதான செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2021ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த 15ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கையின் ரூபாய் பெறுமதி இழந்துள்ளது.

இதனடிப்படையில், ஸ்ட்ரேலிங் பவுணுக்கு நிகராக 6.3 வீதமாகவும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகராக 3.1 வீதமாகவும், இந்திய ரூபாவுக்கு நிகராக 6.3 வீதமாகவும், யுரோவுக்கு நிகராக 0.9 வீதமாகவும் இலங்கையின் ரூபாய் பெறுமதி இழந்துள்ளது.

இதனை தவிர ஜப்பான் யென்னுக்கு நிகராக இலங்கையின் ரூபாயின் பெறுமதியான 1.9 வீதமாக வலுவடைந்துள்ளது. 

Related posts

தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!

Editor

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயம் – ஹிஸ்புல்லாஹ்

wpengine

கிண்ணியா துறையடியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சட்ட விரோத கட்டடிடத்தை நிறுத்தும்படி அரசாங்க அதிபர் உத்தரவு

wpengine