செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா..!

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய கலாநிதி பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராவார்.

இருப்பினும், அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த 3ஆவது நபராக கலாநிதி பந்துர திலீப விதாரண காணப்படுகிறார்.

முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ருவான் விஜயமுனி ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் றிஷாட்,ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine

GCE O/L பரீட்சையை நிறுத்தி உயர்தரம் கற்கும் வாய்ப்பை வழங்குங்கள்!-பாராளுமன்றில் டலஸ்-

Editor