பிரதான செய்திகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம்.

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (11) அறிவித்துள்ளது.
இதுவே இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான இடம்மாற்றங்கள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 105 தலைமைப் பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கும் (CIs), 34 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் (IPs) இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி மாதம் 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக அமலுக்கு வருகின்றன.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து குறிப்பிடத்தக்களவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சேவைத் தேவைகளின் அடிப்படையில் பொது கடமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளார் அனுமதி வழங்கியதோடு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் ஈரானின் ஜனாதிபதியானார் ருஹானி!

wpengine

குரல்வளையை எவ்வாறு நெருக்குவதென்று நீண்டகாலமாக காத்திருந்த இனவாத கழுகுக் கூட்டம் அமைச்சர் றிஷாட்

wpengine

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அசமந்த போக்கு

wpengine