செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும், பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும்.

இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால்,பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் . உலகின் பல நாடுகளை போல இலங்கை  பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும்  ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால்,பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும்,இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும்.எங்களால் இதனை செய்ய முடியாது.

உலகின் பல நாடுகளை போல நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம்.

பாலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால்,அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாங்கள் சுதந்திர  பாலஸ்தீன தேசம் சுதந்தி இஸ்ரேல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம்,இரண்டையும் வேறுவேறு அரசாங்கங்களாக நாங்கள் கருதுகின்றோம், இலங்கை இஸ்ரேலுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணும்.

இலங்கை சுதந்திர பாலஸ்தீன தேசம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொலை செய்வதை கண்டிக்கின்றது.

Related posts

வவுனியாவில் ஆக்கிரமித்த காணிகளை பெற்றுக்கொண்ட கமநல திணைக்களம்

wpengine

மன்னார்,வவுனியா வீதியில் கடல் அலை

wpengine

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவன தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் நியமனம்

wpengine