பிரதான செய்திகள்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகள் சந்திப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)
இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சாய்ந்தமருது யூனியன் மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைமைப் பீடத்தை சேர்ந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினரும் சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிங்கள- முஸ்லிம் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இவற்றை முடிவுக்கு கொண்டு வந்து, முஸ்லிம்கள் மீதான பேரின நெருக்குவாரங்களை தனிப்பதற்கும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இதற்காக முஸ்லிம்கள் தரப்பில் நல்லிணக்க வேலைத்திட்டம் ஒன்றை அவசரமாக முன்னெடுத்து, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் பேரின கடும்போக்கு சக்திகளினால் முஸ்லிம்கள் தொடர்பில் விதைக்கப்படுகின்ற நச்சுக்கருத்துக்களை செயலிழக்க செய்ய வேண்டும் எனவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன் ஓர் அங்கமாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினால் பிரதேசங்கள் தோறும் விழிப்புணர்வு மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பட்டு வருவதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை மையப்படுத்தி, எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள இத்தகையதொரு விழிப்புணர்வு மாநாட்டுக்கு சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் ஒத்துழைப்பு வழங்குவது எனவும் இதற்காக மக்களை அழைக்கும் பணியில் ஈடுபடுவது எனவும் இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக ஷூரா கவுன்ஸில் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரிவித்தார்.

Related posts

காதலி பார்க்கும் போதே! காதலன் தற்கொலை (விடியோ)

wpengine

தமிழ்வின் News,Lankasri இனவாத ஊடகம் “தேன் நிலவு முறிந்தது”

wpengine

இரு துருவங்களாக்கப்படும் ஹக்கீமும் ஹசன் அலியும்

wpengine