பிரதான செய்திகள்

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தினர் மலேசிய பேராசியர்கள் சந்திப்பு.

(நாச்சியாதீவு பர்வீன்)

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10,11 ,12 ஆம் திகதிகளில் கைத்தொழில் வர்த்தகத்திறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகம்  நடாத்தவிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா பற்றிய கலந்துறையாடல் நேற்று (04/10/2016) மலேசியா,கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாகா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை கருத்தரங்கு அறையில் நடை பெற்றது.unnamed-2

இதன்போது , இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் நடத்தவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்பந்தமாக மலாயா பலகலைக் கழகப் பேராசிரியர்களுடன் விரிவாக கலந்துரையாடல்  இடம்பெற்றது. பி. ப. 4.00 மணிக்கு மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பேராசிரியர்களான எஸ். குமரன், கிருஷ்ணன் மணியம்,மோகனதாஸ் ராமசாமி ஆகியோர் மலேசிய பல்கலைக்கழகம் சார்பாகவும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் சார்பாக  ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன், ஆய்வகத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும்  ஆய்வகத்தின் பொருளாளர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed

Related posts

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine

ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து! எவ்வித பேச்சுகளையும் ஜே.வி.பி. நடத்தவில்லை

wpengine

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

Editor