பிரதான செய்திகள்

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கோரிக்கைகள்

(கரீம் ஏ.மிஸ்காத் )

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்.

01. 2008 மற்றும் 2009 காலப்பகுதிக்கு வழங்கப்படவென 20008.06.29ஆந் திகதிய 1565ஆம் இலக்கவர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்ட 424 மௌலவி ஆசிரியர் நியமனத்தில் எஞ்சிய 274 நியமனங்களும் காலதாமதமின்றி அவசரமாக வழங்கப்படல் வேண்டும்.

02.தாபன விதிக்கோவையின் அத்தியாயம் ஓஐஐ பிரிவு 23:1 மற்றும் 23:2 என்பன ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் வெளிநாட்டு விடுமுறைமுழுமையாக அனுமதிக்கப்படல் வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் ஹஜ் விடுமுறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரால், தாபனவிதிக்கோவைக்கு மேலதிகமாக“ஆளுநரின் குறிப்பு 06/2011பிரிவு 03” இன் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாகநீக்கப்படல் வேண்டும்.

03.பொதுநிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 37/92,02/97,09/2004,06/2006 என்வற்றின் மூலம் அரசசேவைச் சம்பளங்கள் மீளமைக்கப்பட்ட போதெல்லாம் ஓய்வூதியம் ழுழுச்சம்பளத்திற்கே கணிக்கப்பட்டது. ஆனால்03/2016இல் மாத்திரம் அட்டவணை-ஐஐ இன்படி குறைச்சம்பளத்திற்கு கணப்பீடு செய்யப்படுகின்றது. இது அட்டவணை-ஐ இன்படி முழுச் சம்பளத்திற்கு கணிப்பீடு செய்யப்படல் வேண்டும். அதாவது, முன்னைய சுற்றறிக்கைகளில் சம்பளம் 60-40, 40-60, 50-50 என்று இரண்டு கட்டங்களில் வழங்கப்பட்டது. அப்போது 100 வீதத்திற்கே ஓய்வூதியம் கணிக்கப்பட்டது. தற்போது 5கட்டங்களில் வழங்கப்படவுள்ளது. ஆயினும் 100 வீதத்திற்கே ஒய்வூதியம் கணிக்கப்படல் வேண்டும். அத்தோடு வருடாந்த சம்பளஏற்றப் பெறுமதியும் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

04. 06/2006 அரசநிர்வாகச் சுற்றறிக்கை மூலம் 2006.01.01முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளம், 06/2006(ஐஏ) மூலம் 2007.06.01முதல் அதன் படிநிலைகள் குறைக்கப்பட்டன. பின்னர் 28/2010 மூலம் அது சீராக்கப்பட்டது. ஆயினும் அதற்கான நிலுவைகள் 2011.07.01 முதலே வழங்கப்பட்டது. இடைப்பட்ட 48மாத நிலுவைகள் வழங்கப்படவில்லை. இது வழங்கப்படவேண்டும்.

05. 10/2000 அரசநிர்வாகச் சுற்றறிக்கை அனுமதிக்கும் ஆலோசனைக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தின் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்களிலும் தாமதமின்றி அமைக்கப்படல் வேண்டும். அதற்குத் தேவையான அழுத்தங்கள் அரசால் வழங்கப்படல் வேண்டும்.

06.நாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் வழங்கப்பட்டுவரும் ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் யாவும், இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு விதிமுறைகளுக்கமைய சேவையின் வகுப்பு-3 தரம் ஐஐக்கு உள்ளீர்க்கப்படல் வேண்டும். இதற்கு அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ஆவண செய்ய வேண்டும்.

07.2004.01.01முதல் அமுல் படுத்தப்பட்டுவந்த அரசாங்க முகாமையாளர்கள் சேவைக் குறிப்பின் பிரகாரம், சேவையின் ஆரம்ப வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு பதவிஉயர்வு பெற 15வருட சேவைகோரப்பட்டது. அதுதற்போது 2013.12.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 1840 /34 இலக்க வர்த்தமானி மூலமான பிரமாணக் குறிப்பின்மூலம் 10வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்க்க முன்னையவர்களுக்கும் பதவி உயர்வுக்கான சேவைக்காலம் 10 வருடங்களாக ஆக்கப்படல் வேண்டும்.

Related posts

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

wpengine

இன்று மன்னாரில் பல இடங்களில் சோதனை

wpengine

மஹிந்­தவுக்கு எதி­ராக சூழ்ச்­சி! கெஹெ­லி­ய

wpengine