இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று (29) லண்டன், கெனிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2 போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றதுடன், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த 4 ஆவது போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.
ஒருநாள் தொடரை கைப்பற்றவதுற்கு இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும்.
அதேநேரம் தொடரை சமப்படுத்துவதற்கும், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கும் இலங்கை அணி கட்டாயம் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
இலங்கை அணி சார்பில் உபாதை காரணமாக லஹிரு திரிமான்னே நாடு திரும்பியுள்ள நிலையில், நிரோஷன் டிக்வெல்ல அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியை பொருத்தவரையில் அணி தலைவர் மெத்தியுஸ், இந்த போட்டியில் வெற்றிபெறும் உத்வேகத்தில் களமிறங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதேவேளை இங்கிலாந்து அணி தலைவர் இயர்ன் மோர்கன் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் அணியை வழிநடத்துவார்.