பிரதான செய்திகள்

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்ல நடவடிக்கை

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட கடினமான ஆனால் அவசியமான சீர்திருத்தங்களுக்காக அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், விரைவில் நாட்டை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

Related posts

சிமெந்து, குடி நீர் தொகுதிகளை வழங்கி வைத்த மாகாண உறுப்பினர் றயீஸ்

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சரியான தீர்மானத்தை எடுக்கும்

wpengine

பேராயரின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!

Editor