பிரதான செய்திகள்

இலங்கையை சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய நபரும் 21 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அங்கு குளிப்பதற்குச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற மகளும் மகனும் முயற்சித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில், மகள் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஆசிரியர்களின் நிகாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய ஆசாத் சாலி

wpengine

வன்னி மக்கள் சுதந்திரமான முறையில் சொந்த காலில் சுயதொழில் செய்ய நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் றிஷாட்

wpengine

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

wpengine