கட்டுரைகள்பிரதான செய்திகள்

இலங்கையில் புதிய சீன மாநிலம் உருவாகப் போகிறது!

நாட்டில் புதிய மாநிலம் உருவாகப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாங்கள் அனைவரும் முப்பது வருடங்களாக கடுமையான சோகத்தில் இருந்தோம். புலிகளுடனான போராட்டம் முப்பது வருடத்துடன் நிறைவடைந்தது. உண்மையில், இலங்கை மக்களாகிய நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

நாங்கள் அதை ஒரு துறைமுக நகரமாகப் பார்க்கிறோம். மேலும் ‘நவீன சீன காலனி துறைமுக நகரம்’ எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அதைத் தொடர முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள் பார்த்தோம்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ், போர்ட் சிட்டி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்பதுடன், இதனை ஒரு சீன மாகாணமாகவே பார்க்கின்றோம்

இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த துறைமுக நகர திட்டத்தின் கீழ் புதிய சீன காலனித்துவ காலனி நிறுவப்பட உள்ளது.

மேலும் புதிய சீன காலனியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த துறைமுக நகரம், நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு முகவர்கள் யாரும் இல்லை.

அந்த நிலத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பிரதிநிதித்துவமோ கட்டுப்பாடோ இல்லை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள புதிய சீன காலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Chinese coronavirus patient at IDH recovered completely – Dr. Jasinghe

wpengine

கிளிநொச்சியின் திருவையாற்றில் தொடரும் மணல் கொள்ளை! நடவடிக்கை எடுக்கத் தவறும் பொலிசார்.

wpengine

இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 137 பஸ் விபத்துக்கள் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

Editor