பிரதான செய்திகள்

இலங்கையில் இறக்குமதி தடைகள் தளர்வு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கையில் இறக்குமதி தடைகள் மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அண்மையில் 286 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது,

இதேவேளை தற்போது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான இறக்குமதி தடையும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 800க்கும் அதிகமான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை!

Editor

பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

wpengine

மஹிந்த – கட்சித் தலைவர்கள் இடையே முறுகல்? உண்மை நிலை என்ன?

Editor