செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில்! அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு .

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நம் நாட்டில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் இருக்கிறார்.

அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கியமாகக் கவனம் செலுத்தியுள்ளது.

கிராமப்புற, அரை நகர்ப்புறம் மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலிருந்து கீழாகப் பாய்ந்து செல்லும் அபிவிருத்திக்குப் பதிலாக, கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து, கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்த மக்களுக்கு வசதிகளை வழங்குவோம் என்று அமைச்சர் கூறினார்.

Related posts

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

wpengine

கன்னியா விவகாரம்! சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்

wpengine

இலங்கை குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க பகிஸ்தான் அரசு நடவடிக்கை- அமைச்சர்

wpengine