அரசியல்பிரதான செய்திகள்

இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்திய நாணய நிதியம்.

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை கூறினார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உணர வேண்டும்.

wpengine

முஸ்லிம் அரசியலின் இயலாமை! பிரதம அதிதியாக ஹஸன் அலி,பஷீர் சேகுதாவூத்

wpengine

12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம்! பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு

wpengine