செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையர்களுக்கு மீண்டும் இத்தாலியில் வேலை விசாக்கள் – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு .

இலங்கையர்களுக்கு மீண்டும் வேலை விசாக்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின் போது வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு இத்தாலி அரசாங்கம் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது.

இலங்கைக்கு ஒரு பிரச்சனையாக இருந்த இத்தாலிய விசா தடை மார்ச் 4 ஆம் திகதி நீக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இப்போது இத்தாலிய அரசாங்கம் எங்களுக்கு விசா வசதிகளை வழங்குகிறது.

வேலை விசாக்களை வழங்கும்போது ஓட்டுநர் உரிமங்கள் தேவை.

இலங்கையில் நாங்கள் வெளியிடும் ஓட்டுநர் உரிமத்தில் பல தொழிநுட்ப வேறுபாடுகள் உள்ளமை தொடர்பில் கடந்த 11ஆம் திகதி எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

சுமார் ஐந்து வகையான ஓட்டுநர் உரிமங்கள் காணப்படுவதால் இத்தாலிய அரசாங்கத்தால் இவற்றை அடையாளம் காணுவதில் சிக்கல்கள் உள்ளன.

அதன் காரணமாக, ஒரு முறையில் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி இணக்கம் தெரிவித்துள்ளோம். கடந்த 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. 13ஆம் திகதி அமைச்சகத்திற்கு அதனை அறிவித்தோம்.

நாங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.“ எனத் தெரிவித்தார்.

Related posts

இன அழிப்பின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மன்னாரில்

wpengine

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு

wpengine

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்

wpengine