பிரதான செய்திகள்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு மேலும் நான்கு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதனை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பாரிஸ் கிளப் அங்கத்துவ நாடுகள் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

Related posts

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தீக்கிரையாக்கப்படும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine

சாரதிகளின் தவறுகளை சுட்டிக்காட்ட விசேட செயலியை அறிமுகப்படுத்த SLTB தீர்மானம்!

Editor

மதுபானத்திற்கு பணம் 5 நாள் குழந்தையை விற்பனை

wpengine