Breaking
Sat. Nov 23rd, 2024
இலங்கயைப்  பொறுத்தவரை முஸ்லீம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இன்னும் சில அரசியல் கட்சிகள்  முஸ்லீம் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. சமுதாய அரசியல் பேசுபவர்கள் பெரும்பாலும் ஒற்றுமை வாதிகளாகாக மக்கள் மத்தியில்  வலம் வருகின்றனர். ஒற்றுமையை பேசாத அரசியல் கட்சிகளே கிடையாது. ஆனால் எல்லோரும் தம் தலைமையில் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்களே தவிர ஒற்றுமைப்படுத்தியதாக தெரியவில்லை.என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.

முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, நாடாளுமன்றங்களில் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க மற்றும் நம்முடைய பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட போன்ற காரணங்கள் உண்டு. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பைப் போல் நம் முஸ்லீம் சமுதாயம் அரசு அதிகாரங்களிலும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தை வழியுறுத்தி ஒட்டு மொத்த முஸ்லீம்  சமூக மக்களின் கவனத்தையும் அரசியலின் பக்கம் திருப்பும் இந்த அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தவறானவை. அரசியல் மட்டுமே சமூக மேம்பாட்டுக்கு தீர்வு என்ற போக்கு முற்றிலும் தவறானது.

ஒரு சமுதாயத்தை பாதுகாக்க எத்தனை அரசியல் கட்சி, ஒவ்வென்றுக்கும் தனித்தனி நிலைபாடு என்று வேறுபட்டு நிற்கிறது. இவை எல்லாம்  சமுதாய அரசியல் என்ற வாதத்தையை பொய்யாக்கும் சான்றுகளாகும். மக்கள் கூட்டத்தை பார்த்து விட்ட தலைவர்களின் அரசியல் ஆசையாகவே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. சமுதாய அரசியல் என்பதெல்லாம் சமூக மக்களின் ஆதரவைப் பெறத்தானே தவிர சமுதாயத்திற்கான அரசியல் என்று சொல்ல முடியாது.

இன்றைய அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு அரசியல் மட்டும் தான் தீர்வு என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கேவலமான விமர்சனங்கள் மலிவான வாதங்கள், முதிற்சியற்ற அரசியல் முடிவுகள் மற்றும் இரட்டை நிலை என சொலிலிக்கொண்டே போகலாம். அரசியல் தீர்வும் தேவையே தவிர அரசியல் மட்டுமே தீர்வாகிவிட முடியாது. எங்கள் கட்சியில்  இணைந்து கொள்ளுங்கள் என்றுதான் இளைஞர்களை அரசியல்வாதிகாளாக்க துடிக்கின்றனர்.

எந்த ஒரு சமுதாயம் கல்வியில் முன்னேறிவிட்டதோ அந்த சமுதாயத்தின் வளர்ச்சியை யாராளும் தடுக்க இயலாது . நம்முடைய முதல் இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பபாக அரசியலாக இருந்துவிடக் கூடாது.என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *