பிரதான செய்திகள்

இலக்கியத்தின் ஊடாக ஜனநாயகம் வளர்க்க முடியும்! சாய்ந்தமருது பிரதேச சபையினை வரவேற்கின்றோம்- கோடீஸ்வரன் (பா.உ)

(காரைதீவு  நிருபர் சகா)
இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும். அதற்கு இந்த
கரவாகுஇலக்கியச்சந்திப்பு நல்ல உதாரணம். இதனை வழிநடாத்துகின்ற தம்பி ஜனூசை
பாராட்டுகின்றேன்.இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவு மாளிகைக்காட்டில் நடைபெற்ற பிரபல எழுத்தாளர் கோவிலுர் செல்வராஜனின்ஊருக்குத்திரும்பணும்’ சிறுகதைநூலின்
அறிமுகவிழாவின்போது பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு  உரையாற்றுகையில்
தெரிவித்தார்.

கரவாகு கலை இலக்கிய மன்றம்  ஏற்பாடுசெய்த 9வது அமர்வில் கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவரங்கும் கோவிலூர் செல்வராஜனின் ஊருக்குத்திரும்பணும் நூல்
அறிமுகவிழாவும் நடைபெற்றன.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளருமான எழுத்தாளர்
சம்சுதீன்ஜனூசின் ஏற்பாட்டில் மணிப்புலவர் மருதுர் ஏ மஜீத் தலைமையில் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் நேற்றுசனிக்கிழமை பகல் இந்நிகழ்வு
நடைபெற்றது.

உணர்வுகளுக்கம்உரையாடல்களுக்கும் களமமமைக்கும் கரவாகு இலக்கியச்சந்திப்பின்
9வது அமர்வு பற்றிய அறிமுகவுரையையும்  வரவேற்புரையையும்  ஏற்பாட்டாளர்
ஊடகவியலாளர் சம்சுதீன் ஜனூஸ் ஆரம்பத்தில் நிகழ்த்தினார்.

ஊருக்குத்திரும்பணும் நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் விபுலமாமணி
வி.ரி.சகாதேவராஜா நயவுரையை விமர்சகர் ஜெஸ்மி எம். மூசா வாழ்த்துப்பாவை
அக்கரையூர் அப்துல்குத்தூசும் நிகழ்த்தினர்.

முன்னதாக மறைந்த  கவிக்கோ அப்துல் ரகுமானுக்காக இருநிமிடநேரம் மௌனஅஞ்சலி
செலுத்தப்பட்டது.

அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:

சாய்ந்தமருது புதிய பிரதேசசபை உருவாக்கப்படுவதை நாம் பூரணமாக வரவேற்கின்றோம்.
இப்புதிய பிரதேசசபை சாய்ந்தமருது முஸ்லிம் மக்களின் உரிமைகள் நலன்களைப்
பாதுகாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சாய்ந்தமருதுக்கு எந்த அடிப்படையில் பிரதேசசபை உருவாக்கப்படுகின்தோ அதற்கு
ஒப்பானதாக கல்முனை வடக்கிற்கும் பிரதேசசபை உருவாக்கப்படவேண்டும்.

சாய்ந்தமருது பிரதேசபை விவகாரத்திற்கு எவ்வாறு தமிழ்மக்கள் தமது பூரண ஆதரவை
நல்கினார்களோ அதேபோன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம்மற்றும் பிரதேசபைக்கு
முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.
இந்த விடயத்தை நேற்றுமுன்தினம் நான் பாராளுமன்றத்திலும் பேசினேன்.

இப்படியான விட்டுக்கொடுப்புகள் மூலமே இரு இனங்களும் நிம்மதியாகவும்
ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழமுடியும்.வீண்பிரச்சனைகளைம் தவிர்க்கமுடியும்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.

கடந்த காலங்களில் இப்பகுதி தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு அந்நியோன்யமாக
மிகவும் சந்தோசமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். முன்னோர்கள் மூத்தோர்கள்
சொன்னதைக் கேட்கின்றபோது எத்துணை சந்தோசமாகஇருக்கின்றது.இங்கு பேசிய
தொழிலதிபர் இப்றாகிம் அவர்களும் நாம் அன்று எப்படி இருந்தோம் என்பதுபற்றிக்
குறிப்பிட்டார்.

சிலவேளைகளில் அரசியல்வாதிகள் தமது சொந்த சுய இலாபங்களுக்காக
சமுகத்தைக்கூறுபோட்டு வந்துள்ளனர். அதனால் உண்மையில் பாதிக்கப்பட்டது அப்பாவி
சமுகங்களே. வீணான முரண்பாடுகளும் வீணாண இழப்புகளுமே எஞ்சின.யாரும் யாரையும்
அடக்கி வாழமுற்பட்டால் எஞ்சுவது நிம்மதியின்மையும் சந்தேகமுமே.

எனவே அவற்றை இனியும் அனுமதிக்கக்கூடாது. ஒற்றுமையாகவாழந்தால் மாத்திரமே
எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெறும். அதனூடாக சந்தோசமாகவும் வாழமுடியும்.
என்றார்.

ஏற்புரையை எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் வழங்கினார். பாடசாலை அதிபர்
எம்.ஜ.எம்.இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் எம்.ஜ.எம்.நயீம்
நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்துவழங்கினார்.முதல் பிரதிகளை பாராளுமனற் உறுப்பினர்
கோடீஸ்வரன் வழங்கிவைத்தார்.

இரண்டாம் கட்டமாக கவிக்கோ அப்துல் ரகுமான் தொடர்பிலான கவியரங்கு இடம்பெற்றது.

 

Related posts

வசீம் தாஜூடீன் கொலை! அனுர தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும்

wpengine

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine