Breaking
Tue. Apr 23rd, 2024

மன்றாடிப் பார்க்கிறோம் நீ, மன்னிப்பதாக இல்லை. மனமுருகி கேட்கிறோம், நீ மசிவதாகவும் இல்லை.எத்தனை தடவைகளானாலும், உன்னிடம்தானே கேட்க முடியும். இத்தனை, நாட்களாகத் தட்டிக்கழித்த நீ, இன்றைக்காவது, எங்கள் பிரார்த்தனைகளை ஏற்றுவிடு ஆண்டவா.

ரிஷாட் பதியுதீனின் அரசியலில் சமூகத்தின் எழுச்சியிருந்திருக்கிறது. இதனால்தான் எதிரிகள் இன்று கிடைத்ததை எல்லாம் கிண்டப் பார்க்கின்றனர். கூடா நட்பு குடியோடு கெடும் என்பதைப் போலவே, கூடியிருந்தவர்களும் இன்று குழிபறிக்கத் தொடங்கிவிட்டனர்.

சமூகங்களின் கண்ணீரைத் துடைத்த தலைவரும் அவரது குடும்பமும், இன்று கண்ணீர்க் கதையாகிவிட்டனர். கூடப்பிறந்தவனுடன் கூண்டில் கிடக்கிறார் தலைவர். குடும்பத் துணைவியையும் குற்றஞ்சாட்ட கூடி நிற்கிறது ஒரு கூட்டம். வினை, வீட்டுக்கே தேடி வந்ததைப் போல, பிழைப்புக்கு வந்தவளும் பிணமாகி விட்டாள். தோளுக்குத் தோளாகச் சேர்ந்து நின்ற அரசியல் உறவுகளும் மெல்ல, மெல்லத் தூரமாகித்தான் வருகின்றன. இத்தனையும் எமது தலைவனை சோர்ந்திடச் செய்யவில்லை.

தாயின் சினைப்பையில் இறைவன் எம்மைச் சேர்த்தபோது, தனியாகத்தானே வளர்ந்தோம் என்கிறார் எமது தலைவன். அந்த இருட்டறையில் துணை நின்ற அதே இறைவன், இதோ! இந்த இருட்டறைகளிலிருந்தும் விரைவில் வெளிச்சத்துக்கு வரவைப்பானாம். இதுதான், எமது தலைவரின் ஈமான்.

மீன் வயிற்றுக்குள் யூனுஸ் நபியைக் காத்த இறைவனுக்கு, இந்த வழிகேடர்களின் இருட்டறை பெரிய பொருட்டில்லையே!

இறைவா! தலைவனின் இந்த நம்பிக்கையில், இன்று அவரது மனைவியையும், இன்னும் சில தினங்களில் தம்பியுடன் தலைவரையும் மற்றும் மாமாவையும், அந்த தரகரையும் நீ வெளிச்சத்துக்கு வர வைத்திடு நாயனே!

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *