அச்சம் நிறைந்த கடினமான சூழலில், நாளை (12) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் எழுதவிருந்த இப்பரீட்சை, இப்படியான சுகாதாரக் கெடுபிடிகள் நிலவும் காலத்தில் நடைபெறுகிறது. கொரோனாவின் பீதி நீங்கி, சுதந்திர மனநிலையில் மாணவர்கள் பரீட்சை எழுத வேண்டும் என்பதற்காகவே, ஆகஸ்ட் வரை பின்போடப்பட்டது. எனினும், பயம் நிறைந்த சூழலிலே எமது மாணவர்கள் இப்பரீட்சையை எழுதுகின்றனர்.
எனவே, பல தியாகங்கள் மத்தியில் பரீட்சை எழுதுவோரின் பெறுபேறுகள் அவரவர் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.
அத்துடன் இன்று புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும் உளமாரப் பிரார்த்திக்கின்றேன்.