உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இறைச்சி மாடுகள் விற்க தடை: மோடி அரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக கட்சிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின், திருநாவுகரசர், முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிகிறது. எதை உண்ண வேண்டும் என சொல்ல அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது. மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். கட்டுப்பாடுகளை ரத்து செய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசின் முடிவால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம். தமிழக அரசு மவுனத்தை கலைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.

Related posts

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor

ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

wpengine