கட்டுரைகள்பிரதான செய்திகள்

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

இலங்கை அரசியல் மற்றும் முஸ்லீம் அரசியலில் தனி இடத்தை வகிக்கும் சமூகம்.

விடுதலைப் புலிகளின் முஸ்லீம்களுக்கு எதிரான இன அழிப்பை துணிந்து எதிர்த்த வீரமண்!

மர்ஹீம் மஜீதுக்கு அரசியல் முகவரியை வழங்கிய சமூகம்!கிண்ணியாவில் மஜீது இருந்தாலும் மூதூர் மஜீது என்பதே உலகிற்கு தெரியும் .

மர்ஹீம் அஷ்ரபுக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கிய மக்கள். SLMC கல்முனையில் ஆரம்பமானாலும் மரத்திற்கு இரத்தத்தை உரமாக்கிய மண், 1990ற்கு முற்பட்ட இரண்டு தேர்தல்களில்  கல்முனையை விட அதிக வாக்குகளை வழங்கிய அஷ்ரபின் பயணத்தை ஆரம்பித்த மக்கள்.

SLMC கட்சிக்காக வேட்பாளர் உற்பட பல இளைஞர்கள்,படித்தவர்களின் உயிர்களை தற்கொலைத் தாக்குதல்களுக்கு வழங்கி வரலாற்றில் தனியிடம் பிடித்தமண்.

இத்தகைய தியாகம் நிறைந்த மண்ணும், தியாகிகள் நிறைந்த சமூகமும் வரலாற்றில்:

1-படகு கவிழ்ந்து பல உயிர்களை பறிகொடுத்தது
2-விடுதலைப் புலிகளின் பசிக்கு பலரை பழியாக்கியது.
3-சுனாமிக்கு உயிர்களை இழந்தது
4-அகதிகளாக கிண்ணியா & கந்தளாய் என இடம் பெயர்ந்தது
5-வுடுதலைப் புலிகளின் சொத்தழிப்பு,பொருளாதார இழப்புக்களை எதிர் கொண்டது
6-EPRLF துரோகத்தால் பலநாட்கள் நிம்மதி இழந்தனர்.

இத்தகைய சரித்திரத்தையும், சோதனைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரேஒரு வரலாற்று மண் மூதூராகும்.

துரதிஷ்டவசமாக இந்த மக்களின் வீரத்தையும், ஒற்றுமையையும் , தியாகத்தையும் முஸ்லீம் அரசியல் மற்றும் தலமைகள் தவறாக வழிநடாத்தியது என்பதே உண்மையாகும்.

1990ம் ஆண்டுக்குப் பின்னரான ஒவ்வொரு தேர்தலும் வீதியோர மாயவித்தை காட்சியாகவே அரங்கேறி வருகின்றது. சுமார் 24 ஆயிரம் வாக்குகளை கொண்ட இந்த சமூகம் இன்று பலகூறுகளாக துண்டாடப்பட்டு தனித்துவம் இழந்து நிற்கின்றது.

மர்ஹீம் மஜீது மற்றும் மக்ரூப் காலத்தில் இந்த சமூகம் கிண்ணியா சமூகத்துடன் இரண்டரக் கலந்ததாக இருந்தது. பின்னர் குறிப்பாக 1989 பொதுத் தேர்தலில் தனியோ SLMC கட்சிக்கு சுமார் 10804 வாக்குகளை அழித்தனர் . இது சுமார் பதியப்பட்ட வாக்குகளில் 80.51% வாக்களிப்பும் வரலாற்றில் பல தடவைகள் பேசப்பட்டது.இதன் மூலம் SLMC கட்சிக்கு தேசியப் பட்டியல் கிடைத்தது. ஆனால் மூதூருக்கு வரங்கவில்லை.அன்று முதல் இன்றுவரை SLMC கட்சிக்கு தேசியப் பட டியலுக்காக 7-10 ஆயிரம் வாக்குகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் இந்தத் தேர்தல் மூலம் தான் இந்த மக்கள் சுயநல அரசியலுக்காக துண்டாடப்படுவதற்கான சந்தர்ப்பத்தை மாற்றுச் சக்தியிடம் சரணகதியாக்கினர். மேலும் கிண்ணியா மக்கள் மீது பிரதேசவாத இடைவெளி இவர்கள் மீது திணிக்கப்படுகிறது.அந்த வகையில் இந்த மக்களை இன உணர்வை ஊட்டி தனிமையாக்கினர்.

அவர்களை வைத்து அதிகாரமோ, அபிவிருத்தியோ வழங்காமல் பந்தயக் குதிரை ஓடினர். சில நேரங்களில் இந்த சமூகம் கேள்வி எழுப்பினால், கிண்ணியாவை ஞாபகமூட்டி பிரதேசவாத புண்ணை தடவி விடுவார்கள்.

இதன் மூலம் தமது சுய இன்பங்களை இந்த மக்களின் வாய்கள் பூட்டப்பட்டதால் பலர் இதமாக அனுபவித்தனர்.தங்களது வரலாற்றை மறந்தவர்களாக மாற்றப்பட்டனர்.

பலரை ஒரே முகாமுக்குள் போட்டியாளர்களாக உருவாக்கினர்.இதனால் எவரையும் எவரும் தலமைகளாக ஏற்க முடியாத சங்கீத கதிரையாக சமூகம் சந்தேகமும் போட்டியும் நிறைந்ததாக மாற்றப்பட்டது.

தற்போதைய பொதுத் தேர்தலில் முஸ்லீம் அரசியல் மற்றும் பல பிரதேசங்கள் பரபரப்பாக உள்ளது.ஆனால்  முஸ்லீம் அரசியலுக்கு அங்கீகாரம் வழங்கிய மூதூர் மண் அமைதியாக உள்ளது.தங்கள் மீது கடமைக்காக விரல் நீட்டி காட்டுபவருக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்த நோய்க்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.தங்கள் மீதும், தேர்தல் மீதும் நம்பிக்கை இழந்த அங்கவீன சமூகமாக நிற்கிறது.

இந்தத் தேர்தல் தங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? தங்களின் பலம் என்ன? சாதிக்க முடியுமா? என்ற பல கேள்விகளுக்கு சாதகமான பதிலே உள்ளது. காரணம்:

1-SLPP /சஜித் அணி:இதில் எவர் 2 ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதை இந்த மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

2-சஜித் அணியில் 2 முஸ்லீம் பிரதிநிதி வருவதற்கு இந்த மக்களின் 100% பங்களிப்பு அவசியமாகும்.

3-குறிப்பாக SLMC தனது ஆசனத்தை கடந்த தேர்தலில் போன்று இழப்பதா அல்லது தக்கவைப்பதா என்பதை 100% தீர்மானிக்கும் இந்த மக்களின் வாக்குகளே

4-சஜித் அணியிடம் தேசியப் பட்டியலுக்காக ஹகீம் 2 ஆசனத்திற்கு பேரம்பேச இந்த மக்கள் அளிக்கும் வாக்குகளே உதவும்.

5-அத்தாவுள்ளாவின் அடுத்த கட்ட நகர்வில் இந்த மக்களின் வாக்களிப்பு கணிப்பீடு செய்யப்படும்.

ஆதலால் இந்த மக்கள் மீதான பார்வை பலருக்கு மனக்கவலையையும் சந்தேகப் பார்வையையும் உருவாக்கி உள்ளது.இதே நிலை மாவட்டத்தில் கணிசமாக முஸ்லீம் வாக்குகள் கொண்ட பிரதேசங்களுக்கு நாளை வரலாம்.

தனித்துவம் என்பது பல்லின சமூகம் உள்ள நாட்டில் தேசியத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மாறாக தனித்துவம் என்பது நம்மை மற்றைய சமூகம் மற்றும் நாம் பிறந்த நாட்டிலே பிரித்துப் பார்க்கும் நிலைக்கு தனிமைக்கு உள்ளாக்குவது அல்ல.

இந்த வரலாற்று துரோகத்தால் தன்னுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதில் மூதூர் சமூகம் மாற்றுத் திட்டத்தை வைத்துள்ளதா? இதற்கு சில ஊமைப் பாஷை கலந்த பதில்களும் உள்ளது.

1-தங்களுக்கு நிச்சயமாக 2.5 வருடம் தேசியப் பட்டியல் கிடைக்கும்.

2-அடுத்த மாகாணசபைத் தேர்தலில் மூதூருக்கு முதலமைச்சர்

3-இனிவரும் காலங்களில் மாவட்ட SLMC அதிகாரம் தங்களுக்கே கிடைக்கும்.

இத்தகைய முகநூல் நியாயப்படுத்தல்கள் இந்த மக்களுக்கு புதியதல்ல.இந்த மக்களின் அரசியல் ரீதியான பின்னடைவிற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்,மாவட்ட முஸ்லீம் அரசியலில் புத்துணர்ச்சி பெறுவது காலத்தின் தேவையாகும்.

பல படித்தவர்கள், உலமாக்கள்,சமூக சிந்தனை உள்ள வேகமானவர்கள்,அரசியல் வரலாறு கொண்டவர்கள் உள்ளனர்.ஆகவே இந்த  மண் தனது இருப்பையும் தனித்துவத்தையும் இந்த தேர்தலில் விவேகமாகவும் விரைவாகவும பயன்படுத்த வேண்டிய காலசூழ்நிலை உருவாகி உள்ளது.

By:Dr.Fahmy Mohamed -UK
Mob& WhatsApp:00447870763570

Related posts

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு;

Editor

இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி!

wpengine

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine