ஓமானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தின் விநியோகம் இன்று (12) முதல் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
22,500 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று சனிக்கிழமை (10) தீவை வந்தடைந்தது.
அதன்படி இன்று முதல் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக இந்த யூரியா உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒரு மூட்டை யூரியா உரத்தை 1000 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நாட்களில் யூரியா உர மூட்டையின் விலை தனியாரால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அதன் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தேவையான அளவு உரங்களை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக உரங்களின் விலை அதிகமாக இருந்த போதிலும் தற்போது சலுகை விலையில் உரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் உறுதி செய்துள்ளது.