பிரதான செய்திகள்

இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்-விக்கினேஸ்வரன்

தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கம் பிரச்சினைகளை நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பு தொடர்பாபக பத்திரிகையாளர்களுக்கு வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

அத்துடன் இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் வடமாகாண முதமைச்சர் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் என்ற அந்த எண்ணப்பாடு எங்களுடைய கலந்துரையாடலில் தெரிகின்றது என்றும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி; நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு!

Editor

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கத் தேசிய அருங்கலைகள் பேரவை பங்களிப்பு றிசாத்

wpengine

சமூதாயம் படும் வேதனைகள் நீங்கி நிம்மதியாக வாழ பிராத்தீப்போம்! அமைச்சர் றிஷாட்

wpengine